logo
புதுக்கோட்டை பழைய மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு

புதுக்கோட்டை பழைய மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு

18/Jun/2021 09:36:34

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை நகரில் உள்ள பழைய மருத்துவமனையை சீரமைத்து மீண்டும் இயங்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதையடுத்து புதுக்கோட்டைக்கு வந்திருந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மருத்துவமனையை நேரில் ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பழைய மருத்துவமனையானடாக்டர்.முத்துலட்சுமி  அம்மையார் நினைவு  மருத்துவமனை உள்ளிட்ட இடங்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்வையிட்டார். அப்போது புதுக்கோட்டை நகர  மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் தொடர்பாக  சுகாதாரத்துறை அமைச்சரிடம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் .வை.முத்துராஜா எடுத்துரைத்தார்.

மேலும் அம் மருத்துவமனையை புனரமைத்து மீண்டும் செயல்பட  வைக்க வேண்டுமென  அமைச்சரிடம் ஏற்கெனவே வைத்த கோரிக்கையின் அடிப்படையில்  செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.

ஆய்வுக்குப் பின்னர்  இந்தக்கோரிக்கை  தொடர்பாக  துறை சார்ந்து என்ன செய்ய வேண்டுமோ அதை நிச்சயம் செய்து தருவதாக  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி அளித்தார்.

இந்நிகழ்வில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ._மெய்யநாதன், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்.கவிதாராமுவடக்கு  மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் மற்றும் நகர, மாவட்ட, ஒன்றிய, வட்ட நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

Top