logo
குறுங்காடுகள் அமைக்கக்கோரிய வழக்கு: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

குறுங்காடுகள் அமைக்கக்கோரிய வழக்கு: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

17/Jun/2021 06:02:32

புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட தமிழக அனைத்து ஊராட்சிகளில் நூறு நாள் வேலை திட்ட பணியில் மூலம் குறுங்காடுகள் அமைக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி தங்க கண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவுக்கு விரிவாக பதிலளிக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட தமிழக அனைத்து ஊராட்சிகளில் நூறு நாள் வேலை திட்ட பணியில் மூலம் குறுங்காடுகள் அமைக்க வேண்டும். இதனை தமிழகம் முழுவதும் கொண்டு வர வேண்டும் என்று கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு இதனை செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் தமிழக தலைமை செயலயகம்  தமிழக வனத்துறை தலைமை அலுவலகம் மாவட்ட ஆட்சியர் என்று அனைவருக்கும் கடிதம் அனுப்பி இருந்தார்.

மேலும் தனியார் நிலங்களில் மரம் வளர்ப்போர் பொது இடங்களில் மரங்களை வைத்து வருபவர்கள் இவர்களுக்கு வருடம் தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் மனு அனுப்பியிருந்தார். இவைகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை .

ஆகையால் சென்னை உயர் நீதிமன்ற கிளை மதுரையில்  வழக்குரைஞர் கணபதிசுப்பிரமணியம் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த  வழக்கு வியாழக்கிழமை (17.6.2021) விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும்  தமிழக அரசு நான்கு வாரகாலத்திற்குள் பதில் கூற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Top