logo
டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் தண்ணீர் திறந்து விட்ட  அமைச்சர்கள்

டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் தண்ணீர் திறந்து விட்ட அமைச்சர்கள்

16/Jun/2021 11:27:32

திருச்சி, ஜூன்: காவிரி டெல்டா பாசன விவாசாயிகளுக்காக மேட்டூரிலிருந்து கல்லணை வந்தடைந்த காவிரி நீரை தஞ்சை, திருவாருர், நாகை மாவட்ட விவசாயிகள் பயன்பாட்டுக்காக தண்ணீர் புதன்கிழமை கல்லணையிலிருந்து திறந்து விடப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி திருச்சி கல்லணையில் புதன்கிழமை (16.06.2020) நடைபெற்ற நிகழ்வில், கல்லணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக  தண்ணீரை நகர்ப் புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர்  எம். ஆர்.கே.பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் எஸ்.இரகுபதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்ர்  மா.சுப்பிரமணியன்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்  எஸ்.எஸ்.சிவசங்கர்பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் .அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் கால மாற்றத் துறை இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழின் ஆகியோர்   திறந்து வைத்தனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் (தஞ்சாவூர்), சு.சிவராசு  (திருச்சிராப்பள்ளி) மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

Top