logo
உதவித் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்

உதவித் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்

10/Feb/2021 01:14:24

புதுக்கோட்டை, பிப்: மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகையை ரூ.3000-ஆகவும், கடும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5000 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர், அறந்தாங்கி, கறம்பக்குடி உள்ளிட்ட அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டப் பொருளாளர் ஜி.கிரிஜா தலைமை வகித்தார். நிர்வாகிகள்  கணேஷ், ராமகிருஷ்ணன், சண்முகராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கே.சண்முகம் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் ஏ.லெனின், சுரேஷ், அனந்தராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றிய அமைப்பாளர்கள் எஸ்.மாலதி, த.லெனின் ஆகியோர் தலைமை வகித்தனர். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.பாலசுந்தரமூர்த்தி மற்றும் சங்க நிர்வாகிகள் ரஜினிக்காந்த், முத்துக்குமார், மாரிமுத்து, சாதனா, சக்திவேல், முத்துலெட்சுமி, விக்ரம், முருகேசன், புனிதா, ராமலிங்கம், மும்தாஜ்பேகம், பவித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றான்.

அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட நிர்வாகி எம்.தங்கவேல் தலைமை வகித்தார். நிர்வாகிகள் செல்லபாண்டியன், ஜெகதீஸ்வரன், ரஞ்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Top