15/Jun/2021 09:56:29
தமிழகம் முழுவதும் அரசால் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்ட கொரோனா நிதியைப் பெற்ற மகிழ்ச்சியை இயல்பாக வெளிப்படுத்திய மூதாட்டியின் புகைப்படம் சமூக வலை தங்களில் வைரலாகியது.
நாகர்கோவிலைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டியின் புகைப்படத்தை எடுத்த புகைப்படக்கலைஞர் ஜாக்சன் அந்த பாட்டியிடம், பாட்டி இந்த பணத்தை என்ன செய்யப் போறீங்க என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு அந்த பாட்டி இந்த பணத்தை வைத்து நல்லதாக சேலையும் தேவையான பொருட்களும்
வாங்க போகிறேன் என்று மகிழ்ச்சியில் நெகிழ்ச்சியாக
சொல்லியிருக்கிறார். பின்னர்
பாட்டியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி
வைரலாகி இருக்கிறது.
அதன்பின் இன்று தமிழ்நாடு அரசால்
பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.5000 நிவாரணத் தொகை ஜாக்சனுக்கு கிடைத்திருக்கிறது.
அதிலிருந்து ரூ.2000 தொகையை அந்த பாட்டியைத் தேடி அவரின் வீட்டிற்கு சென்று கொடுத்து அவரை
இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார் ஜாக்சன். மனிதம்
வாழ்ந்து கொண்டிருப்பதை அவ்வப்போது இது போன்ற நிகழ்வுகள் மனிதர்களுக்கு உணர்த்தி
வருகிறது என்றால் மிகையாகாது.