14/Jun/2021 05:51:00
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை அருகே வீடு வீடாக நேரில் சென்று உணவுப் பொருள்களை ஊராட்சி மன்றத்தலைவர் விநியோகித்தார்.
கொரோனா ஊரடங்கு நேரத்தில் ஏழை எளியவர்கள் வாழ்வாதாரத்தில் மிகவும் சிரமப்படும் மக்களுக்கு உதவி செய்ய சிங்கப்பூர் வாழ் ஓம் நமசிவாய அன்னதான குழுவினரின் ஏற்பாட்டில் கோட்டூர் ஊராட்சிக்கு உள்பட்ட கோட்டூர் அம்பாள்புரம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் ஊனமுற்றோர் , முதியவர் மற்றும் கணவனை இழந்த குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான 25 கிலோ அரிசி, மளிகை பொருள்கள் மற்றும் காய்கறிகளை கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சுமதிபாண்டியன் தனது வாகனத்தில் சென்று வீடு வீடாக நேரில் சென்று வழங்கினார்.
இந்த பொருட்கள் வழங்குவதற்கு முன்பு
அனைவருக்கும் முககவசம் வழங்கி விழிப்புணர்வை ஊராட்சித்தலைவர்
ஏற்படுத்தினார்.