logo
 கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க முன்வர வேண்டும்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை

கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க முன்வர வேண்டும்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை

14/Jun/2021 09:50:05

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கைநாளுக்கு நாள் பெருகி வரும் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தால், கட்டிட பணிகளை தொடர முடியாமல், கட்டுமான தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 சிமெண்ட், மணல், கம்பி, ஜல்லி, செங்கல் போன்ற கட்டுமான பொருட்களின் விலை 25 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் , கட்டுமான பணிகள் முடங்கியுள்ளது. கட்டுமான தொழிலைச் சார்ந்து இருக்கும் சாதாரண  கூலித் தொழிலாளி முதல் அனைவரும் பயன்படக் கூடிய வகையில், கட்டிடப் பணிகள் விரைவாக நடைபெறும் வகையில், அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தனி கவனம் செலுத்தி, கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க முன்வர வேண்டும். கொரோனா பாதிப்பினால் வேலை வாய்ப்பின்றி, வருமானமும் இன்றி, பல லட்சம் தொழிலாளர்கள் இன்றைக்கு வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்அதற்கு பெரிதும் உதவும் வகையில் இந்த கட்டுமான தொழில் இருந்து வந்தது.

எனவே, விவசாயத்திற்கு அடுத்தபடியாக உள்ள கட்டுமான தொழிலை மேம்படுத்த, இமயமலைப் போல் உயர்ந்துள்ள கட்டுமான பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

Top