logo
கர்நாடக  மாநிலத்திலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்த நபர் கைது:230 மதுபாட்டில்கள் பறிமுதல்

கர்நாடக மாநிலத்திலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்த நபர் கைது:230 மதுபாட்டில்கள் பறிமுதல்

11/Jun/2021 05:17:06


ஈரோடு, ஜூன்: கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மதுபாட்டில்களை கடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 230 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் மது வாங்க அண்டை மாநிலமான கர்நாடகாவிற்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் வழியாக கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மது கடத்தி வருவதாக ஆசனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

தன் அடிப்படையில் காவல் நிலையம் முன்பு வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக காய்கறிகளை ஏற்றி வந்த வானத்தை நிறுத்தி சோதனை செய்ததில் காய்கறிக்கு நடுவே சுமார் 230 பாட்டில்களை பதுக்கி வைத்து கடத்தியது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் விசாரணையின் போது வாகனத்தை ஓட்டி வந்த நபர் கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த உதயரங்கநாதன் என்பதும் தமிழகத்தில் முழு ஊரடங்கு என்பதால் இதை பயன்படுத்தி கர்நாடக மாநிலத்தில் இருந்து கோவை மாவட்டத்திற்கு கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதற்காக கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த ஆசனூர் போலீசார் அவரிடமிருந்த 230 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்

Top