logo
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக உழவர் சந்தை மாற்றம்

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக உழவர் சந்தை மாற்றம்

11/May/2021 05:26:26

புதுக்கோட்டை,மே: கொரோனா முழுமுடக்கம் காரணமாக உழவர் சந்தையில் இயங்கி வந்த காய்கனி கடைகள் சமூக இடை வெளியை கடைப்பிடிக்கும் வகையில் புதிய பேருந்து நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டையில் கடந்த 20 ஆண்டுகளாக உழவர் சந்தை இயங்கி வருகிறது. காய்கறிகளை சாகுபடி செய்யும் விவசாயிகள் இடைத்தரகர்களிடம் தங்களத காய்கறிகளை குறைந்த விலைக்கு கொடுக்காமல் நேரடியாக விற்பனை செய்வதற்காக  கடந்த 2000 -இல் நடைபெற்ற திமுக ஆட்சியில் உழவர் சந்தை உருவாக்கப்பட்டது.

அதன்படி இங்கு வியாபாரம் செய்யும் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் நிலத்தை பட்டாவை வேளாண் விற்பனை குழு அதிகாரிகளிடம் முறையாக சமர்பித்து அதன் பின்னர் அரசால் அடையாள அட்டை வழங்கப்பட்ட பிறகு தான் உழவர் சந்தைக்குள் விவசாயிகள் வியாபாரம் செய்ய முடியும்.

புதுக்கோட்டை உழவர் சந்தையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசிடம் இருந்து அடையாள அட்டை பெற்றுக்கொண்டு உழவர் சந்தைக்குள் கடந்த 20 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மே 10 முதல் 24 -ஆம்தேதி வரை இரு வாரங்களுக்கு கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்து வதற்காக முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதுபுதுக்கோட்டை எம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா  திங்கள்கிழமை உழவர் சந்தையை நேரில் ஆய்வு செய்து  அங்கு கடை வைத்திருந்த வியாபாரிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது, கடந்த ஆண்டில் மார்ச் மாதத்திலிருந்து சுமார் 8 மாதங்கள் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டபோது, உழவர் சந்தையிலுள்ள கடைகள் புதிய பேருந்து நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதைப் போல தற்போது இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக வியாரிகளிடம் எம்எல்ஏ- முத்துராஜா உறுதியளித்தார். இதையடுத்து அவரது  முயற்சியால் புதுக்கோட்டை உழவர் சந்தை வியாபாரிகளின்  கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில்  செவ்வாய்க்கிழமை  முதல் காய்கனிக்கடைகள் தொடங்கப்பட்டுள்ளது.

 

Top