09/Mar/2021 12:07:14
புதுக்கோட்டை, மார்ச்: சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் பிரித்து நாளை(10.3.2021) 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வழங்கப்படவுள்ளன.
இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பி. உமாமகோஸ்வரி வெளியிட்ட தகவல்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சுழற்சிமுறையில் பிரித்து வழங்கும் பணி நடைபெற உள்ளது.இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 6.4.2021 -இல் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவதற்கு வசதியாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சுழற்சிமுறையில் பிரித்தும்வழங்கும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முன்னிலையில் புதன்கிழமை நாளை (10.3.2021) காலை 11 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என அவர் தெரிவித்தார்.