logo
ஈரோடு மாநகர் பகுதியில் அறிகுறி இல்லாமல் பரவும் கொரோனா தொற்று

ஈரோடு மாநகர் பகுதியில் அறிகுறி இல்லாமல் பரவும் கொரோனா தொற்று

25/Apr/2021 10:06:44

ஈரோடு, ஏப்:ஈரோடு மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவது சுகாதாரத்துறையினர் திணறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

முதலில் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து 200 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை ஒரே நாளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 331 பேருக்கு தொற்று செய்யப்பட்டுள்ளது. இதில் ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக 115 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஈரோடு மாநகர் பகுதியில்  கடந்த சில நாட்களாக 40, 45 என்ற அளவில் பாதிப்பு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள் ளனர். மாநகர் பகுதியிலும் தொற்று வேகமாக பரவி வருகிறது. முதலில் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை பகுதியில் வலி எடுத்தல், தலைவலி போன்றவை கொரோனா அறிகுறிக ளாக இருந்தது. ஆனால் தற்போது தொற்று பாதிக்கப்பட்ட 85 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்க ளுக்கு எந்த ஒரு அறிகுறியும் வரவில்லை. ஒரு சிலருக்கு மட்டும்  வயிற்றுப்போக்கு  மட்டுமே இருந்துள்ளது.  தற்போது அறிகுறி இல்லாமல் தொற்று வேகமாக பரவி வருகிறது. எனவே மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ள னர். 

முக கவசம், சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை கண்டிப்பாக சோப்பு போட்டு கைகழுவ வேண்டும் எனவும் அறிவு றுத்தியுள்ளனர். ஈரோடு மாநகர் பகுதியில் பெரும்பாலும் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஸ்கிரீனிங் சென்டர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் வீடுகளில்  தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

Top