09/Jun/2021 09:44:42
ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்ட அரிமா சங்கம் சார்பில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மூலம், மருத்துவமனை உறைவிட மருத்துவர் கவிதாவிடம் வழங்கப்பட்டது.
இதில், ஆக்சிஜன் செறிவூட்டி, பல்ஸ் ஆக்சி மீட்டர், ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி, ஆக்சிஜன் முககவசம், கவச உடை, என்–95 மாஸ்க், 3 லேயர் மாஸ்க், கிளவுஸ் என ரூ.10 லட்சம் மதிப்பி லான பொருட்களை வழங்கினர். மாவட்ட ஆளுனர் இளங்கோவன், தனபாலன், நிர்வாகி கள் மகேஸ்வரன், முத்தையா உள்பட பலர் பங்கேற்றனர்.