logo
ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மீட்பு வாகனம், ஆம்புலன்ஸ் ஊர்தி வழங்கல்

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மீட்பு வாகனம், ஆம்புலன்ஸ் ஊர்தி வழங்கல்

09/Jun/2021 09:38:12

ஈரோடு, ஜூன்:ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தும் விதமாக ஒரு இலவச ஆம்புலன்ஸ், ஒரு மீட்பு வாகனம் ஆகியவை  வழங்கப்பட்டது.

மாவட்ட தலைவர் மக்கள் ஜி. ராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஈரோடு கிழக்கு  தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ- திருமகன் ஈவெரா கலந்து கொண்டு  இவ்விரு வாகனங்களை மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவனிடம் ஒப்படைத்தார்.

கொரோனா நோய் பாதித்தோர் எங்கு இருந்தாலும், அவரை அழைத்து வந்து மருத்துவமனையில் அனுமதித்தலுக்காக பயன்படுத்தும் வகையில் மீட்பு வாகனத்தை வடிவமைத்துள்ளனர். ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் படுக்கை உள்ளிட்ட அனைத்து வசதியுடனும் வடிவமைத்துள்ளனர்.

இதில், முன்னாள் எம்.எல்.- ஆர்.எம்.பழனிசாமி, மாநகர மாவட்ட தலைவர் .பி.ரவி, முன்னாள் தலைவர் ராஜேந்திரன், ராஜேஷ்ராஜப்பா உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

Top