26/Sep/2020 05:24:58
by senthilkumar..புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த இடி மின்னல் மற்றும் காற்றுடன் திடீரென்று பெய்த கன மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் என்பது அதிகரித்து காணப்பட்டு வந்தது. இந்நிலையில் வானிலை ஆராய்ச்சி மையம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நல்ல மழை பெய்யும் என்று அறிவித்திருந்தது. இதையடுத்து நேற்று புதுக்கோட்டை மட்டுமல்லாது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான ஆலங்குடி திருமயம் போன்ற பகுதிகளில் திடீரென்று வானம் கருமேகம் மூட்டமாக மாறி கன மழை பெய்தது.இந்த மழைத ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்ததால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. நேற்று பெய்த கன மழையால் நீர் நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.