logo
ரெட்கிராஸ் சங்கம் சார்பில் புதுகை அரசு மருத்துவக்கல்லூரிக்கு உபகரணங்கள் வழங்கல்

ரெட்கிராஸ் சங்கம் சார்பில் புதுகை அரசு மருத்துவக்கல்லூரிக்கு உபகரணங்கள் வழங்கல்

08/Jun/2021 09:34:06

புதுக்கோட்டை, ஜூன்:  இந்திய ரெட்கிராஸ் சங்கம், தமிழ்நாடு கிளையின் சார்பில், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரண்டு ஆக்ஸிசன் செரிவூட்டிகள்(oxygen Concentrater) செவ்வாய்க்கிழமை(ஜூன்8) வழங்கப்பட்டன.

மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில்   இந்திய ரெட்கிராஸ் சங்கம், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சீனு. சின்னப்பா  மருத்துவமனை டீன் பூவதியிடம் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் இந்திய ரெட்கிராஸ்  புதுக்கோட்டை மாவட்ட  துணைத்தலைவர் மருத்துவர் எஸ்.ராம்தாஸ், மாவட்ட செயலாளர் முனைவர் ஜெ. ராஜாமுகமது, பொருளாளர்  எம். மத்தியாஸ், இணைச்செயலாளர் பேராசிரியர் சா.விஸ்வநாதன் , மருத்துவமனை கண்காணிப்பாளர்ராஜ்மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதற்கு முன்னர் புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இந்திய ரெட்கிராஸ்கிளையின் மூலம் ஒரு ஆக்ஸிசன் செரிவூட்டி வழங்கப்பட்டது.

Top