logo
புதுக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் வை.முத்துராஜா வாக்கு சேகரிப்பு

புதுக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் வை.முத்துராஜா வாக்கு சேகரிப்பு

23/Mar/2021 01:57:26

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜா  புதுக்கோட்டை நகராட்சியிவ் காமராஜபுரம் பகுதியில் 13, 14,15,16 ஆகிய வார்டுகளில்  வாக்கு சேகரித்தார்.

இதையடுத்து பிற்பகலில்  புதுக்கோட்டை ஒன்றியம் முள்ளூர், வாகவாசல், புத்தாம்பூர், செம்பாட்டூர் ஊராட்சிகளில் வாக்கு சேகரித்தார். இதில், மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.கே. செல்லபாண்டியன், நகரச்செயலர் க. நைனாமுகமது மற்றும் கூட்டணிக்கட்சி  தலைவர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

 


Top