logo
சத்தியமங்கலத்தில் மலர்சந்தை இயங்க அனுமதிக்க  விவசாயிகள் கோரிக்கை

சத்தியமங்கலத்தில் மலர்சந்தை இயங்க அனுமதிக்க விவசாயிகள் கோரிக்கை

07/Jun/2021 08:40:24

ஈரோடு, ஜூன்:கொரோனா ஊரடங்கு காரணமாக சம்பங்கி பூக்கள் பறிக்கப்படாமல் செடியிலேயே விட்டு விடுவதால் தினமும் பல லட்சம்  நஷ்டம் ஏற்படுவதாக மலர் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் சம்பங்கி பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு கொண்டுவரப்பட்டு ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு அண்டை மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்ப டுகிறது.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மலர் சந்தை செயல்பட தடை விதி்ப்பட்டுள்ளது. இதன்  காரணமாக  விவசாயி கள் சம்பங்கி பூக்களை பறிக்க முடியாமல்  செடியிலேயே விட்டுவிடுவதால்  செடியிலேயே பூக்கள் காய்ந்து அழுகிப் போகும்  நிலை ஏற்பட்டுள்ளது

இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின் றனர். எனவே தமிழக அரசு மலர் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க தினமும் குறிப்பிட்ட நேரம் அவகாசம் கொடுத்து மலர் சந்தை செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Top