logo
ஈரோடு மாநகராட்சி பகுதியில்  அமைக்கப்படும் கூடுதல் வாக்குச்சாவடிகளில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

ஈரோடு மாநகராட்சி பகுதியில் அமைக்கப்படும் கூடுதல் வாக்குச்சாவடிகளில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

17/Feb/2021 05:53:23

ஈரோடு, பிப்:தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு விருகிறது. கடந்த ஜனவரி மாதம் 20-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 20-ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் சி. கதிரவன் வெளியிட்டார். இதன்படி ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, பெருந்துறை, கோபி, அத்தியூர், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில்  மொத்தம் 19 லட்சத்து 57 ஆயிரத்து 203 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 9 லட்சத்து 53 ஆயிரத்து 767 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து 3 ஆயிரத்து 332 பெண் வாக்காளர்களும் உள்ளனர். இதர வாக்காளர்கள் 104 பேர் உள்ளனர். 

மாவட்டம் முழுவதும் 2,215 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கூடுதலாக சில  வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட  ரயில்வே பணிமனையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு  வைக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில்,   ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது கூடுதலாக 70 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படுகின்றன. புதிதாக அமைய உள்ள இடங்களை மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன்  கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்து வருகிறார். 

அதில் இட நெருக்கடி இல்லாமல் வரிசை அமைப்பது. குடிநீர், மின்சார வசதி, கழிப்பறை வசதி ஆகியவற்றையும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இதேபோல் ஒவ்வொரு தொகுதிக்குள்பட்ட கூடுதல் வாக்குச்சாவடி மையங்களில் அந்த தொகுதிக்கு இன்று நியமிக்கபட்ட  தேர்தல் உதவி அலுவலர்கள்  அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகின்றனர். 


Top