logo
திருமயம் தொகுதியில் அரிமளம் ஒன்றியத்தில் 58  கிராமங்களில் அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து பிரசாரம்

திருமயம் தொகுதியில் அரிமளம் ஒன்றியத்தில் 58 கிராமங்களில் அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து பிரசாரம்

25/Mar/2021 07:12:10

புதுக்கோட்டை, மார்ச்: திருமயம் சட்டமன்ற தொகுதியில்  அரிமளம் ஒன்றியத்துக்குள்பட்ட 58 கிராமங்களில்  அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து  பிரசாரம் செய்து  வாக்கு சேகரித்தார்.

 திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளராக பி.கே. வைரமுத்து போட்டியிடுகிறார். அனைத் துத்தரப்பு மக்களின் செல்வாக்கைப் பெற்றுள்ள இவர் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திருமயம்  தொகுதிக் குள்பட்ட பொன்னமராவதி, அரிமளம்,  திருமயம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 33 ஊராட்சிகளை 200 -க்கும் மேற்பட்ட  குக்கிராமங்களில்  தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், அரிமளம் ஒன்றியத்துக்குள்பட்ட சித்தளஞ்சான்பட்டியில் காலை 7 மணியளவில் அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து  பிரசாரத்தைத் தொடங்கி  கிராம மக்களிடம் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, அம்பாள்புரம், ராவுத்தன்பட்டி, கூட்டப்புளிகரை, ஆவரங்காடு, காடத்தான்பட்டி, முள்ளுக்குண்டு,  கண்ணங்காரக்குடி, முத்தரையர்தெரு, ஆனைவாரி, முடுக்குபட்டி.


  ஆயிங்குடி, இராயவரம் ஆகிய கிராமங்களிலும் பிற்பகலில் செங்கீரை, மேனாம்பட்டி, தெற்குநல்லிபட்டி,  கீழப்பனையூர், வையாபுரிப்பட்டி, தாஞ்சூர், மணப்பட்டி, கீரணிப்பட்டி, நல்லகுறிச்சி, தேனிப்பட்டி, கழனிவாசல், காயாம்பட்டி, கொங்கன்தெரு உள்ளிட்ட 58 கிராமங்களில் இரட்டை இலை சின்னத்தில் வாக்ககு சேகரித்து பிரசாரம் மேற்கொண்டார் .

 முன்னதாக,  அரிமளம்  ஒன்றிய செயலர் கடைக்குடி எஸ். திலகர், விசி.சந்திரன், எஸ்.முருகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  


Top