03/Jun/2021 08:35:47
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சாராய விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய ஊராட்சித் தலைவரின் கணவரை போலீஸார் தேடிவருகின்றனர். ஆலங்குடி அருகேயுள்ள புளிச்சங்காடு கைகாட்டியில் சாராய விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அப்பகுதியில் வடகாடு போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது,அப்பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்ட அணவயலைச் சேர்ந்த கணேசன்(45) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து பாட்டில்கள், கவர்களில் வைக்கப்பட்டிருந்த 13 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வடகாடு போலீஸார் வழக்கு பதிந்து தப்பியோடிய அணவயல் ஊராட்சித் தலைவரின் கணவர் சின்னத்துரையை போலீஸார் தேடிவருகின்றனர்.