logo
புதுக்கோட்டையிலுள்ள கலைஞர் உருவச்சிலைக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் மரியாதை

புதுக்கோட்டையிலுள்ள கலைஞர் உருவச்சிலைக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் மரியாதை

13/May/2021 12:37:15

புதுக்கோட்டை, மே: தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றபின் முதன்முறையாக  வந்த அமைச்சர்  சிவ.வீ. மெய்யநாதன்  புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 இதில், மாவட்ட பொறுப்பாளர் கே.கே. செல்லப்பாண்டியன், நிர்வாகிகள் . நைனாமுகமது, எம்.எம். பாலு, சந்திரன், செந்தில் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

 

Top