logo
கறம்பக்குடி மருத்துவமனை முன்களப்பணியாளர்களுக்கு  தமுமுகவினர் உணவு வழங்கல்

கறம்பக்குடி மருத்துவமனை முன்களப்பணியாளர்களுக்கு தமுமுகவினர் உணவு வழங்கல்

02/Jun/2021 09:20:52

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் தமுமுக சார்பில் மூன்றாவது நாளாக  180 பேருக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் ஜமாத்தார்கள் இணைந்து கறம்பக்குடி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் ஊழியர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் 180 பேருக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்டது. இதில், தமுமுக மற்றும் ஜமாத்  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Top