logo
அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மக்களிடம் சென்றடைவதை அரசுஅலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்: அமைச்சர் சி. விஜயபாஸ்கர்

அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மக்களிடம் சென்றடைவதை அரசுஅலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்: அமைச்சர் சி. விஜயபாஸ்கர்

03/Feb/2021 03:29:58

புதுக்கோட்டை, பிப்:அரசின் அனைத்துத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் மக்களிடம் தொய்வின்றி சென்றடைவதை அரசுஅலுவலர்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்றார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர். 

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி முன்னுலையில் நடந்த  வளர்ச்சி திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு  தலைமை வகித்து அமைச்ச் சி.விஜயபாஸ்கர் மேலும் பேசியதாவது: தமிழக முதல்வரால்  மக்களின் நலனுக்காக எண்ணற்ற பல்வேறு நலத் திட்டங்களை  அறிவித்து வருகிறார். இத்தகைய திட்டங்கள் பொதுமக்களிடம் முறையாக சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.

அந்த வகையில்  பொதுமக்களின் அடிப்படை தேவைகளான சாலைவசதி, பொதுவிநியோகத் திட்ட செயல்பாடுகள், பேருந்துவசதி, மின்சாரவசதி, உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து பணியாற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் நலப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

குறிப்பாக அரசின் திட்டங்கள் தொய்வின்றி  பொதுமக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் அலுவலர்களுடன் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சந்தோஷ்குமார் நகராட்சி ஆணையர் (பொ) ஜீவாசுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

Top