logo
ஆதிகாலத்து அலங்கார மாளிகை சார்பில் பாப்பாயி அரசு மருத்துவமனைக்கு 5 லட்சத்தில்  உபகரணங்கள் வழங்கல்

ஆதிகாலத்து அலங்கார மாளிகை சார்பில் பாப்பாயி அரசு மருத்துவமனைக்கு 5 லட்சத்தில் உபகரணங்கள் வழங்கல்

02/Jun/2021 12:20:12

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனையில்   ஆதிகாலத்து அலங்கார மாளிகை சார்பில் கொரோனா தெற்றால் பாதிக்கபட்டவர்கள் பயன்பெறும் வகையில்  ரூ.5 லட்சம் மதிப்புள்ள 4 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், 2 மல்டி யூஸ் மானிட்டர்,  10 கேவி யுபிஎஸ் ஆகிய மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி  பங்கேற்று  அரசு பாப்பாயிஆச்சி மருத்துவ மனைக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.இதையொட்டி, ஆதிகாலத்து அலங்கார மாளிகை நிறுவனம் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 1 லட்சத்தை அமைச்சர் ரகுபதியிடம்  வழங்கப்பட்டது.


 நிகழ்ச்சிக்கு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராம், மாவட்ட வருவாய் அலுவலர் தண்டபாணி,மாவட்ட சுகாதாரதுறை பணிகள் இணை இயக்குனர் ராமு  தாசில்தார் ஜெயபா ரதி உள்ளிட்டேர் முன்னிலை வகித்தனர்.

ஆதிகாலத்து அலங்கார மாளிகை  நிர்வாக இயக்குநர் அருண் வரவேற்றார். மருத்துவர் செந்தமிழ் செல்வி நன்றி கூறினார்..

இதில், பொன்னமராவதி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி, நகர செயலாளர் அழகப்பன், மாவட்ட இணைச்செயலாளர் சின்னையா, வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து,பாஜக மாவட்ட தலைவர் சேது அம்பலக்காரர், நகர காங்கிரஸ் தலைவர் பழனியப்பன், பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி.

காவல் துணைகண்காணிப்பாளர்  செங்கமலக்கண்ணன், காவல் ஆய்வாளர் தனபாலன், சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், ராஜா முகமது, சமூக வலைதள தொகுதி பொறுப்பாளர் ஆலவயல் முரளிசுப்பையா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, ஒன்றிய -நகர தகவல் தொழில் நுட்ப அணி கருணாநிதி,இம்ரான், சத்தியா, ராபர்ட்  உள்ளிட்டேர் கலந்து கொண்டனர். 


Top