logo
தேர்தல் அறிவிப்புக்குப் பின் பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகும்: அமைச்சர் செங்கோட்டையன்

தேர்தல் அறிவிப்புக்குப் பின் பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகும்: அமைச்சர் செங்கோட்டையன்

01/Jan/2021 06:05:53

ஈரோடு: தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்குப் பின் பள்ளிக் கல்வித்துறை பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து அறிவிக்கப்படும் என தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவைத் தொடர்ந்து சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பூமி பூஜை, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நடைபெற்றது. 

இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா ஆகியவற்றை வழங்கி அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் தேதி அறிவித்தபிறகு கல்வித்துறை பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்கும். முன்னதாக முதல்வரிடம் ஆலோசித்து கல்வியாளர்களிடம் கருத்துக் கேட்கப்படும். அதன்பிறகு பொதுத்தேர்வு அட்டவணை அறிவிக்கப்படும். 

சத்தியமங்கலம் பகுதியில்  உள்ள நிபந்தனை பட்டாக்களை உரிமைப்பட்டாவாக மாற்ற இங்கு மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். விரைவில் நிரந்தர பட்டா வழங்கப்படும். கடம்பூர் மற்றும் தாளவாடியில் பட்டா வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்வரிடம் இது குறித்து அறிவிப்பு வெளியிடுவார். 

இனிமேல்  மலைப்பகுதியில் பட்டா வழங்குவதற்கு ஏதுவாக தடை நீக்கப்படும். விரைவில் மலைப்பகுதியிலும் இலவச பட்டா வழங்கப்படும். மாதம் மும்மாரி மழைபெய்யும் என்பார்கள் முதல்வர் ஆட்சியில் மழையில்லாத காலத்தில் கூட மழை பெய்கிறது. மலைப்பகுதியில் குறிப்பாக விளாங்கோம்பை கிராமத்துக்கு நடமாடும் மருத்துவமனை அனுப்பப்படும் என்றார்.


Top