logo
வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை அறிந்து கொள்ள  இலவச  உதவி எண் வெளியீடு

வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை அறிந்து கொள்ள இலவச உதவி எண் வெளியீடு

07/Dec/2020 07:20:51

புதுக்கோட்டை:  வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை அறியும் வகையில்  இலவச வாக்காளர் உதவி எண் வெளியிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்:

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 2021-ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் 16.11.2020 அன்று வெளியிடப்பட்டது. 16.11.2020 முதல் 15.12.2020 முடிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்கம் செய்ய மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. 

ஏற்கெனவே இரு தினங்கள் விண்ணப்பங்கள் பெற சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.  மேலும் 12.12.2020 (சனிக்கிழமை) மற்றும் 13.12.2020 (ஞாயிற்றுகிழமை)   ஆகிய இரண்டு நாட்கள்  அந்தந்த பகுதி வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் மேற்கண்ட வாக்குச்சாவடி மையங்களில் வைக்கப்படும் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு தங்களது பெயர் புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா எனவும், தங்களது பெயர், விபரங்கள் புகைப்படம் ஆகியவை தவறின்றி காணப்படுகிறதா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளலாம். 

 வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கவும், நீக்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் விண்ணப்பங்கள் அளிக்கலாம். மேலும் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை அறிய புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 04322 1950 என்ற இலவச வாக்காளர் உதவி எண்ணிற்கு அழைத்து தெரிந்து கொள்ளலாம்.

2021-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது வாக்களிக்க வேண்டியது ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும். அவ்வாறு வாக்களிக்க நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற்றிருப்பதை தாங்கள் உறுதிசெய்துகொள்வது அவசியமானதாகும். 

வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும், தேர்தலின்போது ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் விதமாகவும்   பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடமிருந்து 

நான் ஏன் வாக்களிக்க வேண்டும்?  (Why my vote matters?) என்ற தலைப்பில் 40 வினாடிகள் இயங்கக் கூடிய குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.

குறும்படங்கள் அனுப்பும்போது அவர்கள் பெயர், வகுப்பு, பயிலும் பள்ளி-கல்லூரி மற்றும் தொடர்பு எண் விவரத்துடன்   கீழ்க்கண்ட  WhatsApp அலைபேசி  எண்ணில் பதிவிடலாம்.  அல்லது  கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

மின்னஞ்சல் முகவரி : sveep.puthukkottai@gmail.com <mailto:sveep.puthukkottai@gmail.com> மற்றும் WhatsApp அலைபேசி எண்கள்- 97862 54576  மற்றும்  94436 39800. குறும்படங்கள் 11.12.2020 அன்று மாலை 5.00 மணி வரை அனுப்பலாம்.  சிறப்பாக தேர்ந்தெடுக்கப்படும் 3 குறும்படங்களுக்கு பரிசுகள் அளிக்கப்படும். 


Top