02/Jun/2021 09:13:48
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரிக்கு கொரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டதால் அவர் தனது முகாம் அலுவலகத்தில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலுக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தைச்சேர்ந்த அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோருடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை தீவிரப்படுத்தும் நடவடிக்கை களில் ஓய்வின்றி தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், லேசான அறிகுறியை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது புதன்கிழமை காலை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் தனது ஆட்சியர் முகாம் அலுவல கத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் மருத்துவத் துறை வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் சிகிச்சைகள் எடுத்து வருகிறார்.