logo

சூரம்பட்டி பகுதியில்அனுமதியின்றி சாலையோரம் கடை அமைத்த வியாபாரிகளுக்கு அபராதம் உரிமத்தை ரத்து

01/Jun/2021 11:02:35

 

ஈரோடு, ஜூன்: ஈரோடு சூரம்பட்டி பகுதியில்அனுமதியின்றி சாலையோரம் கடை அமைத்த  வியாபாரிகளுக்கு அபராதம் விதித்து உரிமத்தை ரத்து செய்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுவது குறித்து  ஆணையர்  மா. இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் அவ்வப்போது  பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டுஅபராதம் விதித்து வருகின்றனர்.

தற்போது முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் மாநகராட்சி சார்பில் நடமாடும் வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகளில் காய்கறி பழவகைகள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய மாநகராட்சி சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு மாநகராட்சி சார்பில் சிறப்பு பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தள்ளுவண்டி வியாபாரத்தில் ஈடுபடும் சிலர் தள்ளுவண்டி உடன் கீழே துணி வைத்து வியாபாரம் செய்வதாக புகார்கள் வந்தன.

இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் நேதாஜி நகர், பாரதிபுரத்தில் தனிமை படுத்தப்பட்டுள்ள பகுதியில்  நேரடி ஆய்வில் ஈடுபட்டனர்.

பின்னர் சூரம்பட்டி பகுதியில் சென்று ஆய்வு செய்தபோது அங்கு தள்ளுவண்டி வியாபாரத்தில் ஈடுபட்ட சிலர் தரையில் துணியை வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து இவ்வாறாக வியாபாரம் செய்துவியாபாரிகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு வியாபாரம் செய்ய வழங்கப்பட்டுள்ள உரிமத்தையும் மாநகராட்சி அதிகாரிகள் ரத்து செய்தனர்.

Top