logo
தமிழகத்தில் ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி:  முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

தமிழகத்தில் ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

01/Jun/2021 08:57:46

முழு ஊரடங்கை நீடித்து கொண்டே செல்ல முடியாது. விரைவில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் விடியோவில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே அமலில் இருந்த முழு ஊரடங்கு வரும் ஜூன் 7 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. முழு ஊரடங்கு தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட பின்னர் கொரோனா பாதிப்பு சற்றே குறையத் தொடங்கியுள்ளது. அதே சமயம் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு வேகமாக இயங்கி வருகிறது.

 இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில்  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, மக்கள் கட்டுப்பாடுகளை முறையாகக் கடைப்பிடித்தால் ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

கொரோனாவால் அடித்தட்டு மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. அதற்காக மாதம் 2 ஆயிரம் வீதம் இரு மாதங்களுக்கு 4 ஆயிரம் வழங்கப்படுகிறது. 13 பொருள்கள் அடங்கிய தொகுப்பும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர் முழு ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது. கொரோனா பரவலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். கொரோனாவை வெல்வோம் என அதில்  கூறியுள்ளார். இதனால் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் விரைவில் அமல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Top