11/Jun/2021 08:33:18
ஈரோடு, ஜுன்: ஈரோடு அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ -க்கள் கே.வி.ராமலிங்கம் மற்றும் தென்னரசு ஆகியோர் சொந்த நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகள் அம்மா உணவக ஊழியர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள், காய்கறி தொகுப்பை வழங்கினர்.
ஈரோடு மாநகர மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு முன்னிலை வகித்தார். மாநகர மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் பங்கேற்று 100 மாற்றுத்திறனாளிகள், அம்மா உணவக பணியாளர்கள் 108 பேருக்கு 5 கிலோ அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள், காய்கறி தொகுப்பை வழங்கினார்.
முன்னாள் மேயர் மல்லிகாபரமசிவம், அ.தி.மு.க., பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி, கோவிந்தராஜ், ஜெகதீசன் உள்பட பலர் பங்கேற்றனர்.