logo
உத்திரமேரூர் கோயிலில் திருப்பணியின்போது கண்டுபிடிக்கப்பட்ட தங்கப் புதையல்

உத்திரமேரூர் கோயிலில் திருப்பணியின்போது கண்டுபிடிக்கப்பட்ட தங்கப் புதையல்

13/Dec/2020 07:36:00

500 ஆண்டு கால பழமையான குழம்பேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக உத்திரமேரூர் நகர மக்கள் திருப்பணி மேற்கொண்டனர். திருக்கோயிலை புனரமைக்கும் பொழுது குவியல் குவியலாக தங்கம் கிடைத்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் குழம்பேஸ்வரர் கோவில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் உள்ள கோவில் கருவறையின் நுழைவுவாயிலின் முன் உள்ள கருங்கற்களாலான படிக்கட்டுகளை திருப்பணிக் குழுவினர் அகற்றினர். 

அப்போது அதன் கீழே துணியால் சுற்றப்பட்ட சிறிய அளவிலான மூட்டை இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது ஏராளமான தங்க ஆபரணங்கள் இருந்தன. 500 ஆண்டு கால பழமையான கோவிலை வருவாய்த்துறையின் அனுமதி இல்லாமல் முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கி இருப்பதாகவும் அங்கு கிடைத்த புதையல் தங்கத்தைப் பறிமுதல் செய்ய வருவாய்த்துறையினர் சென்ற போது அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் புதையலாக கிடைத்த பழங்காலத்து தங்கத்தை அப்பகுதி பொதுமக்கள் சிலர் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கடந்த 16 ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் தங்கம் பயன்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. அன்னியர்கள் படையெடுப்பு காரணமாக, சாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட நகைகளை இந்த கோவிலின் பல்வேறு பகுதிகளில் புதைத்து வைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்போது கண்டெடுக்கப்பட்ட நகைகள் யாவும் சுவாமி சிலைகளுக்கு திரு ஆபரணங்களாக சாத்தப்படும் நகைகள் என நம்பப்படுகிறது. அவற்றின் மதிப்பீடு விரையில் செய்யப்படும் என்று கூறப்பட்டது.

Top