logo
புதுக்கோட்டையில் முடிதிருத்தும் நிலையங்கள் திறப்பு: முதல்வருக்கு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் நன்றி

புதுக்கோட்டையில் முடிதிருத்தும் நிலையங்கள் திறப்பு: முதல்வருக்கு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் நன்றி

14/Jun/2021 09:35:56

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டையில் முடிதிருத்தும் நிலையங்கள் திறக்க அனுமதியளித்த  தமிழக முதல்வருக்கு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட மருத்துவ சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் மாவட்ட அமைப்புச் செயலாளர் எம்பி முத்து  கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 5 லட்சம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கொரோனா முழு முடக்கம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து கடந்த 60 நாள்களாக தவித்து வந்தனர்.

பல்வேறு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு கடைகள் திறக்கப்பட்டபோதும், சலூன் கடைகளுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டதுகிருமி நாசினிகளின்  பயன்பாட்டை கட்டாயமாக வைத்துக் கொண்டு நடத்தப்படும் முடி திருத்தும் பணியில் தொற்று பரவுவதற்கு வாய்ப்பு இல்லாத சூழலை அரசு உணர்ந்து கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டுமென முதல்வருக்கு கோரிக்கை வைத்தோம்.

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதிசட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆகியோரை நேரில் சந்தித்து சலூன் கடை களை காலை வேளையில் 5 மணி நேரமாவது  திறப்பதற்கு உத்தரவிட தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய வேண்டுமென  கோரிக்கை வைத்தோம்மேலும், 60 நாட்களாக கடைகள் மூடப்பட்டுள்ளதால்  அரசின்  நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.

இந்நிலையில், மூன்றாம் கட்ட தளர்வில் சலூன் கடைகளைத்திறப்பதற்கு அரசு அனுமதியளித்தது மகிழ்ச்சியளிக்கிறதுதமிழக முதல்வருக்கு புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின்  சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

Top