logo
ஆலங்குடி தொகுதியில்  பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி போடும் முகாம்: அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

ஆலங்குடி தொகுதியில் பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி போடும் முகாம்: அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

27/May/2021 12:06:27


புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமை சுற்றுச்சூழல், மற்றும் இளைஞர் விளையாட்டு நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். 

 முகாமை ஆய்வு செய்தபின்னர் அமைச்சர் கூறியதாவது: 

தமிழக முதல்வர்  கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறார். மாவட்டங்களில் அரசின் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன்,கோவிட் நோயினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்து குணப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளும் ஒருங்கிணைந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். அதனடிப்படையில் இன்றையதினம் பள்ளத்திவிடுதியில் நடைபெற்று வரும் கோவிட் தடுப்பூசி முகாம் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்து குணப்படுத்துதல், கோவிட் கவனிப்பு மையங்களை ஏற்படுத்துதல், போதிய படுக்கை வசதி, ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் கோவிட் தொற்று ஏற்படாமல் தடுக்கவும், கோவிட் தொற்றின் ஆரம்ப அறிகுறிகள் தென்பட்ட உடனேயே கோவிட் தொற்றை கண்டறியும் வகையில் அதிக அளவு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாம்களில் பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி போடப்படுவதுடன், கோவிட் அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனையும் செய்யப்படுகிறது.

இதனால் கோவிட் நோயாளிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து எளிதாக குணப்படுத்துவதற்கு வாய்ப்பாக இம்மருத்துவ முகாம்கள் அமைந்துள்ளது. கோவிட் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதில் தடுப்பூசி  மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி  போட்டுக்கொள்ள வேண்டும். தற்பொழுது  புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 வயது முதல் 44 வயதிற்குட்பட்டவா;களுக்கும் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவா;களுக்கும் கோவிட் தடுப்பூசி  போடப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் போதுமான அளவு தடுப்பூசி  கையிருப்பில் உள்ளது. 

எனவே கோவிட் நோய் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் அனைவரும் கட்டாயம் கோவிட் தடுப்பூசி  போட்டுக்கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் மெய்யநாதன்.

 

 

 

Top