logo
சத்தியமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி: தோட்ட உரிமையாளர் தலைமறைவு

சத்தியமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி: தோட்ட உரிமையாளர் தலைமறைவு

26/May/2021 09:48:58

ஈரோடு,மே: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உட்பட்ட கராச்சி குறை என்னுமிடத்தில் ராஜன்( 45) என்பவருக்கு சொந்தமான ஒன்றை ஏக்கர் நிலத்தில் வாழை பயிரிடப்பட்டு இருந்தது.வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால் தோட்டத்தை சுற்றி ராஜன் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களைக் காக்க உயர் அழுத்த மின் வேலி அமைத்து இருந்தார்.

 இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு அவரது தோட்டத்திற்கு அருகே ஆண் யானை ஒன்று வந்தது. பின்னர் ராஜன் தோட்டத்துக்கு செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக மின் மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து  உயிரிழந்தது.

இதுகுறித்து சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ராஜன் தலைமறைவாகி விட்டார். வனத்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராஜனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Top