logo
திருமயம் தொகுதியில் பொன்னமராவதி ஒன்றியத்தில்  49  கிராமங்களில் அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து பிரசாரம்

திருமயம் தொகுதியில் பொன்னமராவதி ஒன்றியத்தில் 49 கிராமங்களில் அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து பிரசாரம்

27/Mar/2021 12:00:48

புதுக்கோட்டை, மார்ச்: திருமயம் சட்டமன்ற தொகுதியில்  பொன்னமராவதி  ஒன்றியத்துக்குள்பட்ட 49 கிராமங்களில்  அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து  வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்து  வாக்கு சேகரித்தார்.


 திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளராக பி.கே. வைரமுத்து போட்டியிடுகிறார். அனைத்துத்தரப்பு மக்களின் நன்மதிப்பைப்  பெற்றுள்ள இவர் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திருமயம்  தொகுதிக்குள்பட்ட பொன்னமராவதி, அரிமளம்,  திருமயம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 33 ஊராட்சிகளை 200 -க்கும் மேற்பட்ட  குக்கிராமங்களில்  தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், பொன்னமராவதி  ஒன்றியத்துக்குள்பட்ட  வாழைக்குறிச்சியில் காலை 7 மணியளவில் அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து  பிரசாரத்தைத் தொடங்கி  கிராம மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து, திருநாட்டாம்பட்டி, நெய்வேலி, பூவாலக்குடி, அரசமலை, வையாபுரி, கண்டெடுத்தான்பட்டி, சாத்தனூர், வெள்ளகுடி, காரையூர், காடம்பட்டி, பாறைக்களம், மேட்டுப்பட்டி, கொன்னையம்பட்டி, மங்கனூர், சடையம்பட்டி, இடையாத்தூர், குலவாய்ப்பட்டி உள்பட 49 கிராமங்களில்  இரட்டை இலை சின்னத்தில் வாக்ககு சேகரித்து பிரசாரம் மேற்கொண்டார்.  அதிமுக நிர்வாகிகள்  மற்றும் பாஜக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  


Top