logo
 கோவிட் சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்கள், செவிலியரகளுக்கு பணிநியமன ஆணையை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வழங்கினர்

கோவிட் சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்கள், செவிலியரகளுக்கு பணிநியமன ஆணையை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வழங்கினர்

25/May/2021 05:51:44

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 50 மருத்துவர்கள், 10 செவிலியர்களுக்கு தற்காலிக பணிநியமன ஆணைகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் வழங்கினர்

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில்   மருத்துவமனையில்   (24.5.2021)  மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜாகந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவிட் சிகிச்சைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தற்காலிக  பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினர்.

சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி பேசியதாவது: தமிழகத்தில் கோவிட் நோய் தொற்றை கட்டுப்படுத்தும்  வகையில் முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார்குறிப்பாக கோவிட் சிகிச்சைக்கு தேவையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தற்காலிகமாக நியமனம் செய்ய உத்தரவிட்டுள்ளார்அதன்படி, தற்போது  புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 50 மருத்துவர்கள் மற்றும் 10 செவிலியர்களுக்கு தற்காலிகமாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு மருத்துவக்குழுக்கள் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதுபொதுமக்கள் தவறாமல் கோவிட் தடுப்பூசி  போட்டுக் கொள்ள வேண்டும்.

மேலும்  புதியதாக பணிநியமனம் பெற்றுள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கோவிட் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்துவதற்கு  அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்றார் அமைச்சர் எஸ். ரகுபதி.


இதைத்தொடர்ந்துசுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்  பேசியதாவது: கோவிட் இல்லா தமிழகத்தை உருவாக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார். இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் தினமும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு கோவிட் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பரிசோதனையின் முடிவில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு முதல்வர் உத்தரவிட்டபடி கோவிட் சிகிச்சைக்கு தேவைப்படும் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு புதுக்கோட்டை மாவட்டம், மட்டுமல்லாமல் அருகில் உள்ள மாவட்டங்களி லிருந்தும் கோவிட் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இவ்வாறு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க ஏற்கெனவே தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

 மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோவிட் கவனிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே புதிதாக பணி நியமனம் பெற்றுள்ள மருத்துவர்கள் கோவிட் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்த வேண்டும்  என்றார்  சிவ.வீ. மெய்யநாதன்.

தில், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி , வழக்குரைஞர் கே.கே.செல்லப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Top