logo
மலைத்தேனீகள் கொட்டிய பிளஸ் 2  மாணவிகள் 4 பேருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

மலைத்தேனீகள் கொட்டிய பிளஸ் 2 மாணவிகள் 4 பேருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

21/Jan/2021 12:01:04

ஈரோடு-ஜன: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள செங்கோட்டையன் நகர் பகுதியிலிருந்து பொலக்காளிபாளையத்தில் செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மிதிவண்டியில் சென்ற  பிளஸ் 2 பயிலும் மாணவிகள் 4 பேரை மலைத்தேனீகள் கொட்டியதால் பாதிக்கப்பட்ட அனைவரும்  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெரியார்நகர் இந்திராநகர் ஆலங்காட்டுப்புதூர் கங்கம்பாளையம் செங்கோட்டையன்நகர் உட்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மிதி வண்டிகள் மூலம் மாணவ மாணவிகள் பள்ளிக்கு சென்றுவருவது வழக்கம்.

 கடந்த 9 மாதங்களாக பள்ளிக்கள் செயல்படாத நிலையில் தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிக்கள் வழக்கம் போல் செயல்படும் என அரசு அறிவித்ததையடுத்து முதல்நாளில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்குச்சென்றனர். 

கங்கம்பாளையம் செங்கோட்டையன்நகர் பெரியார்நகர் ஆலாங்காட்டூர் ஆகிய பகுதிகளில் பேருந்து போக்குவரத்து இல்லாததினால் அனைத்து மாணவ மாணவிகளும் அரசு வழங்கியுள்ள மிதிவண்டிகள் மூலமாகவே பள்ளிக்கு சென்றுவருகின்றனர். இந்நிலையில் செங்கோட்டையன்நகர் பகுதியிலிருந்து மிதிவண்டிகள் மூலம் பள்ளிக்கு சென்ற 12ஆம் வகுப்பு மாணவிகளான தேவராஜ் மகள் பவித்ரா, சுப்பிரமணியம் மகள் மைவிழி, மகாலிங்கத்தின் மகள் மோகனபிரியா, காமராஜ் மகள் மேகவர்ஷனி ஆகிய 4 பேரும் பொலக்காளிபாளைத்தில் செயல்படும் அரசு பள்ளிக்கு மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்துள்னர். 

அவர்கள் கங்கம்பாளையம் பகுதியில் சென்றபோது பறந்து வந்த மலைத்தேனீகள் மாணவிகளை சரமாரியாக கொட்டியதாம். நிலைகுலைந்து போன மாணவிகள் அருகில் உள்ள  வீட்டினுள் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கேயும் துரத்தி கடித்த மலைத்தேனீயை விரட்ட அந்த வீட்டு உரிமையாளர் போராடி நான்கு மாணவிகளையும் வீட்டினுள் வைத்து பூட்டிவிட்டு மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவல் பெற்று மாணவிகள் தஞசமடைந்த வீட்டு வந்து மாணவிகளை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துசென்றபோது கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதிக்கு வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மாணவி பவித்ரா மயக்கமடையவே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவமனைக்கு சென்றபோது இங்கு மற்ற 3 மாணவிகளும் முதலுதவி அளிக்கப்பட்டு தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 

பவித்ரா என்ற மாணவி மட்டும் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில்  சிகிச்சை பெற்று வருகிறார். பள்ளிக்கு சென்ற முதல்நாளில் மாணவிகள் 4 பேரை மலைத்தேனீகள் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மலைத்தேனீக்கள் கடித்து கோபிசெட்டிபாளையம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 12-ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவிகளுக்கு சிகிச்சைக்கான முழு தொகையையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

Top