logo
நிவர் புயலை எதிர்கொள்ள களத்தில் இறங்கிய முதல்வர் எடப்பாடி

நிவர் புயலை எதிர்கொள்ள களத்தில் இறங்கிய முதல்வர் எடப்பாடி

25/Nov/2020 07:46:23

சென்னை: நிவர் புயலை எதிர்கொள்வதில் தமிழக அரசு புயல் போல செயல்படுகிறது. முதல்வரே வேட்டியை மடித்துக் கட்டிக்  களத்தில் இறங்கியுள்ளார்.  இதைப் பார்க்கும் போது கடந்த 2015-இல் சம்பாதித்த கெட்ட பெயரை அதிமுக இந்த புயலில் துடைத்து விடும் போலத் தெரிகிறது.

 2015 புயலையும் பெரு மழை வெள்ளத்தையும் யாரும் மறந்திருக்க முடியாது. செம்பரம்பாக்கம் மீது அத்தனை பேரும் பழியைப் போட்டு விட்டு போய் விட்டார்கள். ஆனால் சென்னை மக்கள்  அப்போது பட்ட பாட்டை இப்போது கூட மறக்க முடியாது. 

இந்த நிலையில்தான், இப்போது நிவர் புயல் வந்து வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இப்போதும் செம்பரம்பாக்கம் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் அப்போது நடந்ததற்கும், இப்போது நடப்பதற்கும்   நிறைய வித்தியாசங்கள் உள்ளன. செம்பரம்பாக்கம் 2015-இல் திடீரென செம்பரம்பாக்கம் திறந்து விடப்பட்டது. அதே சமயம் பெரும் மழையும் சேர்ந்து கொண்டது. இதனால் ஊரே வெள்ளக்காடாகிப் போனது.

ஆனால், தற்போது ஆரம்பம் முதலே திட்டமிட்டு  செயல்பட்டு வருகிறது அதிமுக அரசு. செம்பரம்பாக்கத்தை இப்போதே மெல்ல திறந்து விட்டுள்ளனர். இதனால் திடீரென திறப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. இதில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சரியாக செயல்படவில்லை என்பது தான் எதிர்க்கட்சிகள் வைத்த பெரிய குற்றச்சாட்டு. 

அதை இப்போது துடைக்கும் வகையில் எடப்பாடியார் செயல்படுகிறார். அவரே நேரடியாக நீர்த்தேக்கத்திற்குப் போய் விட்டு வந்து விட்டார். நடவடிக்கைகளையும் முடுக்கி விடுகிறார். பல்வேறு மீட்பு நிவாரணப் பணிகளை உடனுக்குடன் டுவிட்டரில் மக்களுக்கு அப்டேட் செய்கிறது முதல்வர் டீம். தம்பி யாராவது கேள்வி கேட்டால் உடனே  தம்பி  என்று அழைத்து  பதில் அளிக்கிறார் முதல்வர். 

இதெல்லாம் இதுவரை எந்த முதல்வரிடமும் பார்க்காதது, பார்க்க முடியாதது. அந்த வகையில் முதல்வர் இந்த புயலை மிகச் சிறப்பாக எதிர்கொண்டிருப்பதாகவே தெரிகிறது. அதை விட முக்கியமாக முன்னேற்பாடுகளையும், புயல் வந்த பிறகு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளையும் இப்போதே  திட்டமிட்டு செய்து வருகிறது தமிழக அரசு.அந்த வகையில் முதல்வரின் செயல்பாடுகளை அனைவரும் பாராட்டுகிறார்கள். ஏற்கெனவே எளிமையான முதல்வர் என்ற பெயரை வெகு சீக்கிரத்தில் கெட்டியாக பிடித்து கொண்ட நிலையில், 2015-இல் விட்டதை இப்போது பிடித்தால் சரிதான்.


Top