logo

ஈரோட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது

23/May/2021 01:05:40

ஈரோடு, மே : ஈரோட்டில் சாராயம் காய்ச்சியவரை போலீஸார்  கைது, சாராய ஊறலையும்  பறிமுதல் செய்தனர்.

ஈரோடு பவானி ரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. 

இதையடுத்து  ஈரோடு மதுவிலக்கு போலீசார்  பி.பெ.அக்ரஹாரம் பகுதிக்கு சென்று  மோகன் (62) என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது, வீட்டில் 50 லிட்டர் சாராய ஊறலும், ஒரு லிட்டர் சாராயமும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோகனை போலீசார் கைது செய்து, சாராயத்தையும், சாராய ஊறலையும் பறிமுதல்  செய்தனர்.

Top