logo
ஈரோடு மாநகர் பகுதியில்  2-ஆவது கட்டமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரம்

ஈரோடு மாநகர் பகுதியில் 2-ஆவது கட்டமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரம்

05/Dec/2020 05:08:44

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் உள்ள  1 லட்சத்து 30 ஆயிரம் குடியிருப்புகளை கண்காணிக்கவும். வர்த்தக நிறுவனங்கள், பேருந்து நிலையம், கடை வீதிகள் உள்ளிட்டவற்றை கண்காணிக்கவும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 480 கண்காணிப்பு கேமரா மாநகர் பகுதியில் உள்ள முக்கியமான இடங்களில் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

கடந்த மாதம் இந்த பணி தொடங்கியது முதல் கட்டமாக காவேரி வீதி, பன்னீர்செல்வம் பார்க், ஆர்.கே.வி. சாலை, மணிக்கூண்டு, நேதாஜி சாலை, காந்தி சாலை, ஈஸ்வரன் கோவில் வீதி உள்பட பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இரண்டாவது கட்டமாக கருங்கல்பாளையம் காவிரி சாலை, கே.என்.கே. சாலை, மூலப்பட்டறை, பார்க் சாலை, சத்தியமங்கலம் சாலை, பவானி சாலை, கிருஷ்ண பாளையம் உட்பட பகுதிகளில் தற்போது தொடங்கியுள்ள கேமரா பொருத்தும் பணி இந்த மாதம் இறுதி வரை நடைபெறும்.

இந்த கண்காணிப்பு கேமரா 500 மீட்டர் தொலைவில் உள்ள காட்சிகளையும் மிகத் தெள்ளத் தெளிவாக பதிவு செய்யும். குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள் பொதுமக்கள் நடமாட்டத்தையும் துல்லியமாக கண்காணிக்கும். மேலும் இரவு நேரங்களிலும் காட்சிகளை துல்லியமாக பதிவு செய்யும் சக்தி கொண்ட கேமரா பொருத்தப்படவுள்ளன.

Top