logo
நவ. 29 வரை மருத்துவக் கலந்தாய்வு ஒத்தி வைப்பு- அரசு அறிவிப்பு

நவ. 29 வரை மருத்துவக் கலந்தாய்வு ஒத்தி வைப்பு- அரசு அறிவிப்பு

24/Nov/2020 11:50:48

சென்னை: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த 4 நாள்களுக்கு (நவ.29 வரை) மருத்துவக் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாள்களில் ஏற்கெனவே நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த கலந்தாய்வு வரும் திங்கள்கிழமைக்கு (நவ.30) மேல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவா் புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் அசாதாரண சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், மருத்துவக் கலந்தாய்வை தள்ளிவைப்பதாக மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்தது.

செவ்வாய்க்கிழமை (நவ.24) நடைபெறவிருந்த கலந்தாய்வு அடுத்த வாரம் திங்கள்கிழமைக்கு (நவ.30) ஒத்திவைக்கப்பட்டது, அதன் தொடா்ச்சியாக நவ.24-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த கலந்தாய்வுகளும் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.கலந்தாய்வுக்கான புதிய தேதிகள் மருத்துவக் கல்வி இயக்ககத் தோ்வுக் குழு இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தோ்வுக் குழுச் செயலா் செல்வராஜன் தெரிவித்துள்ளாா்.


Top