logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 19,154 பேர் கொரோனாவால் பாதிப்பு- பலி எண்ணிக்கை 183

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 19,154 பேர் கொரோனாவால் பாதிப்பு- பலி எண்ணிக்கை 183

22/May/2021 08:07:55

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 19154 நபர்கள் கொரோவா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அதில் 15,988 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்கள். இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 183 ஆகும். தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 283 ஆக உள்ளது.

21.5.2021 - நிலவரப்படி தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை -423. குணமடைந்து வீடு திரும்பிய வர்களின் எண்ணிக்கை-111.   இறந்தவர்களின் எண்ணிக்கை 01.

புதுக்கோட்டை மாவட்டத்தில் RTPCR மாதிரி இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரத்திற்கு மேல் எடுக்கப்பட்டுள்ளது. தினசரி 2000 திற்கும் மேல் RTPCR மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. மொத்தம்  2  RTPCR பரிசோதனை மையங்கள் உள்ளன. புதுக்கோட்டை  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், முத்து மீனாட்சி பல்நோக்கு மருத்துவ மனையிலும் அமைந் துள்ளது.

 ஆக்சிஜன் படுக்கைகள்  - 968: 

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 3028 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. அதில் 870 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர், 2158 படுக்கைகள் காலியாக உள்ளது. ஆக்சிஜன் படுக்கைகள்  - 968. சாதாரண படுக்கைகள் - 1936. தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் 124-ம் உள்ளன. 

 தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்களின் எண்ணிக்கை - 78,926:

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 21,769 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. அதில் 9,63,917 நபர்கள் பயன் அடைந்துள்ளார்கள். 3,169 தொற்று உள்ள நபர்கள் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா முழுமுடக்க விதிமுறைகளை மீறியதாக   28,345 நபர்களிடம்  ரூ. 59, 99,300 தொகை வசூலிக்கப்பட்டது.  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்-174. ஊராட்சிகளில் 49 நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் - 25.

Top