logo
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள  தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்: உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார்

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்: உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார்

21/May/2021 06:14:23

நாகர்கோவில், மே: கொரோனா பெரும் தொற்றில் இருந்து நம்மை பாதுக்காத்து கொள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றார்  சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு ஆர்.சுரேஷ்குமார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர் கோவில் அரசு விருந்தினர் மாளிகையில்  நடைபெற்ற கொரோனா தொற்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதியாசர் மாண்புமிகு ஆர்.சுரேஷ்குமார் கலந்து கொண்டு   கொரோனா தொற்று பொதுமக்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் கொரோனா பெறும் தொற்றில் இருந்து பாதுக்காத்துக்கொள்ள உதவும் முக கவசம், கையுரை ஆர்சனிக்கம் ஆல்பம் 30 -சி மாத்திரைகளை வழங்கினார்.

அதில் அவர் பேசுகையில், சமூக இடைவெளியை பின்பற்றுவது, முக கவசம் அணிவது கைகளை கிரிமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதன் அவசியத்தையும்  கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அனைத்து தரப்பினரும் கண்டிப்பாக தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும். அரசின் உத்தரவுகளை கடைபிடித்து கொரோனா பெறும் தொற்றை விரட்டியடிப்போம் என  குறிப்பிட்டார்.

இதையடுத்து, சமூக அர்வலரும் மருந்துவருமான நாகேந்திரன்  ஆர்சனிக்கம் ஆல்பம் - 30 சி யின் மருத்துவ பலன் குறித்து விளக்கமளித்தார்.

Top