logo
கொரோனா தடுப்பூசி திருவிழா: புதுக்கோட்டையில் ஆர்வத்துடன் திரண்டு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட பொதுமக்கள்

கொரோனா தடுப்பூசி திருவிழா: புதுக்கோட்டையில் ஆர்வத்துடன் திரண்டு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட பொதுமக்கள்

15/Apr/2021 01:47:39

புதுக்கோட்டை, ஏப்: கொரோனா தடுப்பூசி திருவிழாவின் இரண்டாம் நாளான வியாழக்கிழ மை புதுக்கோட்டையில் நடைபெற்ற முகாமில் பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு  தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது.  அது கைமீறிப்போய்விட்டதாகவும் கூறப்படுகிறது . புதுக்கோட்டை மாவட்டத்திலும்  கொரோனா வின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. புதன்கிழமை ஒருநாளில் மட்டும் மாவட்டத்தில் 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 இந்த நிலையில், தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி திருவிழா புதன்கிழமை தொடங்கப்பட்டது. இதன் மூலம் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் 45 வயதுக்கு மேற்பட் டோருக்கு  தடுப்பூசி போடப்படுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை  காலை முதலே  புதுக்கோட்டையிலுள்ள  கொரானா தடுப்பு ஊசி போடு மையத்தில்  திரளான பொதுமக்கள்   தடுப்பூசி போடுவதற்காக நீண்ட வரிசை யில் ஆர்வத்துடன் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தடுப்பூசி போடுவ தற்கு முன்னதாக  ரத்தக் கொதிப்பு பரிசோதனை மற்றும் காய்ச்சல்  கண்டறியும் பரிசோத னை ஆகியவை செய்யப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் வேறு ஏதேனும் உடல் உபாதைகளுக்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டுள்ளனரா என்பது குறித்தும் மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர். சம்பந்தப்பட்டவர்களின் ஆதார் விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப் படுகிறது.

இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு கொரோனா  தடுப்பூசி போடப்படுகிறது.  கோவிஷில்ட்  மற்றும் கோவாக்சின் ஆகிய 2 தடுப்பு மருந்து  போடப்படுகிறது. இதில் பொதுமக்களுக்கு எது தேவையோ அந்த ஊசியைப் போட்டுக்கொள்ளவும்  வாய்ப்பளிக்கப் படுகிறது. 


Top