logo
கொரோனா நிவாரண நிதிக்கு மொய்விருந்து மூலம் கிடைத்த ரூ.20 ஆயிரத்தை ஆட்சியரிடம் வழங்கிய தேநீர்கடைக்காரர்.

கொரோனா நிவாரண நிதிக்கு மொய்விருந்து மூலம் கிடைத்த ரூ.20 ஆயிரத்தை ஆட்சியரிடம் வழங்கிய தேநீர்கடைக்காரர்.

20/May/2021 08:13:05

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கரோனா நிவராண நிதிக்காக மொய்விருந்து வைத்து அதில், கிடைத்த ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை தேநீர் கடைக்காரர் வியாழக்கிழமை ஆட்சியரிடம் வழங்கினார்.

    ஆலங்குடி அருகேயுள்ள மாங்கனாம்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (43). வம்பன் 4 சாலைப்பகுதியில், தேநீர் கடை நடத்திவரும் இவர், கரோனா நிவாரண நிதிக்காக மொய் விருந்து நடத்துவதாக அழைப்பிதழ்களை பொதுமக்களுக்கு வழங்கி மே.5-ம் தேதி இவரது தேநீர் கடையில் மொய் விருந்து நடத்தினார்.அதன் மூலம் ரூ.28 ஆயிரம் வசூலானது. அதில், ரூ.20 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரியிடம் சிவக்குமார் வியாழக்கிழமை வழங்கினார். மேலும், மீதமுள்ள ரூ. 8 ஆயிரத்தோடு, தனது சொந்த நிதி ரூ. 2 ஆயிரத்தை சேர்த்து ரூ.10 ஆயிரத்தை வரைவோலை மூலம் தில்லியில் பாதிக்கப்ட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக அந்த அரசுக்கு அனுப்ப உள்ளேன் என்றார் சிவக்குமார்.

Top