logo
புதுக்கோட்டை நகராட்சியில்ரூ.11.25 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை நகராட்சியில்ரூ.11.25 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்

25/Feb/2021 11:29:37

புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை நகராட்சியில் ரூ.11.25 கோடியில்  நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டப்பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை நகராட்சியில் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் திறந்து வைத்து பேசியதாவது:

புதுக்கோட்டை நகராட்சி, அண்ணாசிலை அருகில் ரூ.6.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள பல்வகை வணிக வளாக கட்டிடப்பணிகளுக்கு  அடிக்கல் நாட்டப்பட் டுள்ளது. இக்கட்டடம் கலையரங்கம், கடைகள், அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 4,500 ச.மீ பரப்பளவில் கட்டப்பட உள்ளது. 

சந்தைப்பேட்டையில் தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 30 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் திறந்து வைக்கப்பட் டுள்ளது. இதில் ஒவ்வொரு வீடும் தலா 520 சதுரஅடி பரப்பளவில் 2 அறைகள், ஒரு பொது அறை,  சமையல் அறை, கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நகரப்பேருந்துகள் நிறுத்தமும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் புதுக்கோட்டையில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இக்கட்டடம் தரைத்தளம், முதல் தளம் என மொத்தம் 8,350 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளதுடன் கோட்டாட்சியர் அறை, கூட்டரங்கம், அலுவலக அறை, கணினி அறை, கோட்டாட்சியர் உதவியாளர் அறை, நீதிமன்ற விசாரணை அறை, பதிவு வைப்பறை, ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

 இதன் மூலம்  புதுக்கோட்டை நகராட்சியில் ரூ.11.25 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற மற்றும் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கி  வைக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா; சரவணன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையர் (பொ) ஜீவாசுப் பிரமணியன், உதவிப் பொறியாளர் ரமேஷ்குமார், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா; த.ஜெயலெட்சுமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


Top