logo
கொரோனா இரண்டாவது அலை பரவல்: மே-6 ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்அமலாகிறது

கொரோனா இரண்டாவது அலை பரவல்: மே-6 ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்அமலாகிறது

04/May/2021 09:47:11

சென்னை: தமிழ்நாட்டில் 2-வது அலை கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் புதிய கட்டுப்பாடுகள் மே6-ஆம் தேதி முதல்  அமலுக்கு வருகிறது.

 ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்ஊரகம் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி இல்லைஇறைச்சி கடைகள், மீன் மார்க்கெட் சனி, ஞாயிறு கிழமைகளில் திறக்க அனுமதியில்லைநண்பகல் 12 மணிவரை மட்டுமே தேநீர் கடைகள் செயல்பட அனுமதி.

அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களில் 50 சதவீதம் ஊழியர்களுடன் செயல்பட அனுமதிமருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழக்கம் போல் செயல்படலாம்காய்கறி, பலசரக்கு, பழ கடைகள் குளிர்சாதன வசதியின்றி பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.

ரயில், மெட்ரோ, தனியார் , அரசு பேருந்துகளில் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே பயணிகளுக்கு அனுமதிஐடி நிறுவனங்களில் இரவுப்பணி மேற்கொள்ள அனுமதிஉணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே வழங்க அனுமதி.

பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். திருமண நிகழ்வுகளில் 50 பேர் பங்கேற்கலாம். இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 20 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி.

சமுதாயம், அரசியல், கல்வி மற்றும் பொழுதுபோக்கு, இதர விழாக்கள் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்த தடைதிறந்த வெளி மற்றும் உள் அரங்கங்களில் விழாக்கள் நடத்தவும் அனுமதி இல்லைமளிகை மற்றும் காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் திறக்க அனுமதி இல்லை

நோய் பரவலை கட்டுப்படுத்த மாஸ் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளையும் அனைவரும் பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.                                                 

கொரோனா தொற்றுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகளை அனுப்ப மு.. ஸ்டாலின் அறிவுரை

தமிழ்நாட்டில் 2-வது அலை கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 952 பேரை நோய் தொற்றி உள்ளது. 122 பேர் பலியாகி உள்ளனர். 1 லட்சத்து 23 ஆயிரத்து 258 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழ்நாட்டிலேயே சென்னை நகரம்தான் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. இங்கு மட்டுமே நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 பேர் இறந்துள்ளனர்.இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளருடன் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

கொரோனாவுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய அதிகாரிகளை அனுப்ப ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். அந்தந்த மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகளை அனுப்ப அறிவுறுத்தியுள்ளார். மருந்துகள் , ஆக்சிஜன் இருப்பு, படுக்கை வசதிகள் இருப்பதை கண்காணிக்க வேண்டும். மக்களுக்கு எவ்வித ததையுமின்றி மருத்துவ சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Top