logo

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மினி கிளினிக் உள்பட பல்வேறு திட்டப்பணிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

23/Feb/2021 06:00:50

புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மினி கிளினிக் உள்பட பல்வேறு திட்டப்பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கணபதிபுரம் கிராமத்தில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை (22.02.2021)  சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.


இதேபோன்று புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஆட்டாங்குடி, அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், கீழக்குறிச்சி மற்றும் திருநாடு, விராலிமலை ஊராட்சி ஒன்றியம், பாக்குடி மற்றும் பேராம்பூர் ஆகிய கிராமங்களிலும் முதலமைச்சாpன் அம்மா மினி கிளினிக்கை  அமைச்சர்  விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் சாh;பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள், புதிய பேருந்து வசதி, அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு போக்குவரத்து பணிமனை, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்கள் பொதுமக்களின் நலனுக்காக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை நகராட்சியில்ரூ.1.24 கோடியில் நிறைவேற்றப்பட்ட  திட்டப் பணிகள் தொடக்கம்:

புதுக்கோட்டை நகராட்சியில் டி.வி.எஸ். கார்னர் பகுதியில் தேசிய மீன் வள மேம்பாட்டு வாரிய நிதியின் கீழ் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மீன் அங்காடி கட்டடம் மற்றும் திருவப்பூரில் அம்ரூட் திட்டத்தின் கீழ் ரூ.70.23 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பூங்கா ஆகிய பணிகள் அமைச்சர் விஜயபாஸ்கர்  திறந்து வைத்தார்.


 புதிதாக கட்டப்பட்ட மீன் அங்காடியில் 13 கடைகள் கட்டப்பட்டுள்ளதுடன், போதிய இடவசதியுடன்  அமைக்கப்பட்டுள்ளது.இதேபோன்று புதிதாக கட்டப்பட்ட பூங்காவில் நடைபாதை, 8 வடிவ நடைபாதை, பேவர்பிளாக் நடைபாதை, யோகா மையம், சிறுவர்  பூங்கா, பெரியவர் உடற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.


மேலும் புதுக்கோட்டை நகராட்சியில் சாலைவசதி, குடிநீர்வசதி, மின்விளக்கு வசதி, புதிய கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  என்று அமைச்சர்  சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்  பெ.வே.சரவணன், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் பா.ஆறுமுகம், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் த.ஜெயலெட்சுமி, பொது சுகாதார துணை  இயக்குநர் பா. கலைவாணி, நகராட்சி ஆணையர் (பொ) ஜீவாசுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஆர்.கார்த்திக்தொண்டைமான், ஆர்.நெடுஞ்செழியன், மு.ராஜநாயகம், மாவட்ட வேளாண் விற்பனைக்குழுத் தலைவர்க. பாஸ்கர், மாவட்ட கூட்டுறவு அச்சக சங்கத் தலைவர் சேட், முன்னாள் மாவட்ட கூட்டுறவு அச்சக சங்கத் தலைவர் வே.மு.குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலா; கலந்து கொண்டனர்.   


Top