logo
புதுக்கோட்டை நகரின்  குடிநீர் பிரச்னையை தீர்க்க எம்எல்ஏ- தீவிர முயற்சி

புதுக்கோட்டை நகரின் குடிநீர் பிரச்னையை தீர்க்க எம்எல்ஏ- தீவிர முயற்சி

19/May/2021 10:26:34

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை நகரில் நீடித்துவரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகளில் சுமார் 1.50 லட்சம் மக்கள் வசித்து வருகின் றனர். குடிநீர் பிரச்னையைத் தீர்ப்பதற்காக  திமுக ஆட்சி காலத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது  திருச்சியில் இராமநாதபுரம் கூட்டுக்குடி நீர்த்திட்டத்தை  தொடங்கி வைத்தார். அத்திட்டத்துடன்  புதுக்கோட்டை நகராட்சியும் மாவட்டத்தின் சில பகுதிகளும் சேர்க்கப்பட் டன. இதையடுத்து  புதுக்கோட்டை நகராட்சிக்கு கடந்த சில ஆண்டுளுக்கு முன்பு வரை சுமார் 1.20 கோடி லிட்டர் குடி நீர் கிடைத்து வந்தது. 

இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக 10 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே புதுக்கோட்டை நகர வாசிகளுக்கு குடிநீர் கிடைத்தது. இதனால், நகரில் வசிக்கும் பெரும்பாலானோர்  சுத்தகரிக்கப்பட்ட தண்ணீர் கேன்களுக்கும், மினி வேன்களில் கொண்டு வந்து விற்கும் தண்ணீருக்கும்  மாறினர். 

தமிழக சட்டப்பேரவைத்தேர்தல் முடிந்து திமுக வெற்று பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றார். புதுக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில்  டாக்டர் வை. முத்துராஜா சட்டமன்ற உறுப்பினரானார். இதையடுத்து பதவி ஏற்புக்கு முதல்நாளிலேயே புதுக்கோட்டை நகரின் குடிநீர்ப்பிரச்னை அவரது கவனத்துக்கு சென்றது.

உடனடியாக புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்துக்குச் சென்று பொறியாளர்  ஜீவாசுப் பிரம ணியன் உள்ளிட்ட அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது 10 நாள்களுக்குள் தண்ணீர் தட்டுப்பாடு தீர்க்கப்படும் என எம்எல்ஏ-விடம் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

 ஆனால், எதிர்பார்த்தபடி புதுக்கோட்டை நகராட்சிக்கு   குடிநீர் வராததால்  நகராட்சி அதிகா ரிகளுடன் புதுக்கோட்டை நகரிலுள்ள மேனிலை, தரைதள நீர்த்தேக்கத்தொட்டிகளை புதன் கிழமை ஆய்வு செய்தார். 

திருச்சியில் இருந்து புதுக் கோட்டைக்கு வருகின்ற தண்ணீரின் அளவை சரிவர கணக்கிட முடியவில்லை என்பதால் புதுக்கோட்டைக்கு முன்பாக உள்ள எல்லைப்பட்டி கிராமத்தில் இருக்கின்ற தண்ணீர் தொட்டி சந்திப்பை பார்வையிட்டார்.

 பிறகு அங்கு வருகின்ற தண்ணீரை எந்த விரயமுமின்றி புதுக்கோட்டைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை எப்படி செய்வது என்று அதிகாரிகளுடன் ஆலோசனை செய் தார்.  சட்டமன்ற உறுப்பினர்  புதுக்கோட்டை நகருக்கு  குடிதண்ணீரை இடைவிடாமல் மக்களுக்கு  கிடைப்பதற்கான  முயற்சியில் முழுமூச்சாக  ஈடுபட்டு வருவதற்கு  பொதுமக் கள் பாராட்டு   தெரிவித்தனர்.

Top