logo
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம்  பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் ஆலோசனை

19/May/2021 03:14:10

ஈரோடு மே: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக  ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம்  பெருந்துறை அதிமுக எம்.எல். ஜெயக்குமார் ஆலோசனை மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  கிராம ஊராட்சி பகுதிகளில்  அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் ஒன்றியக்குழு தலைவர்  சாந்திஜெயராஜ் தலைமையில் நடந்தது.

 இந்த கூட்டத்தில் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார் கலந்து கொண்டு அதிகாரிகள் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்களிடையே ஆலோசனை மேற்கொண்டார்.

பெருந்துறை ஒன்றியத்தில் சுள்ளிப்பாளையம், பட்டக்காரன்பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் நோய்தொற்று அதிகரித்துள்ளாகவும், ஊராட்சி செயலாளர்கள் மூலம் ஒவ்வொரு ஊராட்சியிலும் காய்ச்சல் மற்றும் நோயுற்றவர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார். தற்போது கொரோனா நோய் பரவலை தடுக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். கவுன்சிலர்கள், ஊராட்சித்தலைவர்கள், வார்டு உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் அனைவரும் ஒன்றினைந்து கொரோனா பரவலை தடுக்க பாடுபடுவோம்.மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.

ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி அவர்கள் நலனில் நாம் அதிக அக்கரை செலுத்த வேண்டும். அதிக அளவில் கொரோனா பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அந்த பகுதி உள்ளாட்சி பிரதிகளோடு இணைந்து அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி பாதுகாப்பு வழிமுறைகளை செயல்படுத்துங்கள்

ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம் உங்களோடு பணியாற்ற காத்திருக்கிறேன். உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் தற்போதைய சூழலில் நேரில் சந்திப்பதை தவிர்த்து தங்களது ஊராட்சிகளின் அத்தியாவசிய பணிகளுக்கு அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். (8508944444).

இதற்கு என தனி உதவியாளர் நியமிக்கப்பட்டு  அன்றாடம் கிடைக்கப்பெறும் தகவல்  அடிப்படையில் பணிகள் தொடர உள்ளேன். பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் மிக முக்கிய பணிகளாக நடைபெற்று வரும் அத்திக்கடவு அவிநாசி திட்டம், கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் போன்ற திட்டப்பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறினார்.

இக்கூட்டத்தில் வட்டார  வளர்ச்சி அலுவலர்கள் பாவேஸ், கணபதிசுந்தரம்,     துணைத்தலைவர் உமா மகேஸ்வரன், விஜயலட்சுமி சாமிநாதன்,சண்முகப்பிரியா ஜெயக்குமார், ஹேமலதா சம்பத், பழனிச்சாமி, நவபாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

Top